குடிசைத் தொழிலாகிப் போன தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்! – பகுதி-1
இன்றைக்கு இருக்கின்ற247தமிழ் எழுத்துகளில்239எழுத்துகளை மாற்றுவதற்கு நடக்கும்பல்வேறு முயற்சிகளின் தொகுப்பு இக்கட்டுரை(தொடர்). தமிழ் எழுத்து வடிவங்களை எப்படியாவது மாற்றிஉருக்குலைத்து விடவேண்டும் என்ற உறுதிதமிழர்களிடையே தென்படுகிறது. தமிழுக்குப் பகைதமிழரே என்ற உண்மையை வெளிச்சமிட்டுக்காட்டுகிறது இந்தச் சீர்திருத்த முயற்சிகள். தமிழ்நாட்டில் எத்தனையோ குடிசைத் தொழில்கள்உண்டு.தீப்பெட்டிக்குப் பெயர் ஒட்டும் தொழில், தீக்குச்சிக்கு எரிமருந்து வைக்கும் தொழில், இலைச்சுருட்டு(பீடி) சுற்றும் தொழில், பேரீச்சம்பழத்தை எடை போட்டுபொட்டலம் போடும் தொழில் என்று பலவுண்டு. தமிழ் எழுத்துச் சீர்திருத்தமும் இத்தொழில் போன்றுஉயிரெழுத்து மாற்றத் தொழில், உயிர்மெய்கள்மாற்றத் தொழில், தமிழெழுத்து எண்ணிக்கைகுறைப்புத் தொழில் போன்று பல்வேறு…