செஞ்சீனா சென்றுவந்தேன் 9 – பொறி.க.அருணபாரதி
(ஆடி 25, 2045 /ஆகத்து 10, 2014 இதழின் தொடர்ச்சி) 8. கோலொச்சும் மனை வணிகமும் வாழ்விழந்த வேளாண்மையும் சோழிங்கநல்லூர் – சிறுஞ்சேரி – செம்மஞ்சேரி எனப் பல பகுதிகளில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் குவிந்துள்ள சென்னையில், எப்படி மனை வணிகத் தொழில் மிகப்பெரும் ஆதிக்கம் செலுத்துகிறதோ, அதே போலவே தகவல் தொழில்நுட்ப நகரங்கள் குவிந்துள்ள சியான் நகரில் மனை வணிகத் தொழிலே கொடிகட்டிப் பறக்கிறது. பெரும் பன்னாட்டு நிறுவனங்கள் நடத்துகின்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், அங்கொரு புதிய வகை சீன மக்களை…