ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):20
(ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 19. தொடர்ச்சி) ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):20 வீர விருதுகள் வீரம் செறிந்த தமிழ் நாட்டில் வாழ்ந்த சில பெருநில மன்னரும்,குறுநில மன்னரும் அரிய வீரச் செயல்களால் அழியாப் புகழ் பெற்றனர். அவர் பெற்றிருந்த பட்டங்கள் வெற்றி விருதுகளாக விளங்கின. செய்யாற்றங்கரையில் நிகழ்ந்த கடும் போரில் வெற்றி பெற்ற தலைவன் ஒருவன், ‘செய்யாற்று வென்றான்’ என்ற பட்டம் பெற்றான். அவ்வாறே பாலாற்றங் கரையில் நிகழ்ந்த பெரும் போரில் மாற்றாரை வென்ற வீரன் ஒருவன், ‘பாலாற்று வென்றான்’ என்று பாராட்டப் பெற்றான்….
ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):19
(ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 18. தொடர்ச்சி) ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):19 கிடங்கில் அகழி சூழ்ந்த கோட்டையைக் கிடங்கில் என்றும் கூறுவதுண்டு. முன்னாளில் கிடங்கில் என்னும் பெயருடைய கோட்டையின் தலைவனாகவும், கொடை வள்ளலாகவும் விளங்கிய நல்லியக்கோடன் என்ற சிற்றரசனது பெருமையைச் சிறுபாணாற்றுப்படை கூறுகின்றது. அவன் காலத்தில் அவ்வூர், கோட்டை மதில்களாலும், அகழிகளாலும் நன்றாக அரண்செய்யப்பட்டிருந்தது. இன்றும் அங்குக் காணப்படும் சிதைந்த சுவர்களும் தூர்ந்த கிடங்குகளும் அதன் பழம் பெருமையை அறிவிக்கின்றன. கிடங்கால் என்னும் பெயர் கொண்டு வழங்கும் அவ்வூருக்கு அண்மையில் திண்டிவனம் இப்போது சிறந்து…
ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):18
(ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 17. தொடர்ச்சி) ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):18 வெளி வெளி என்னும் சொல் சில ஊர்ப் பெயர்களில் அமைந்திருக்கின்றது. நாகபட்டினத்துக்கு அருகே வடக்குவெளி என்னும் ஊர் உண்டு. சங்ககாலத்துப் புலவரில் இருவர், வெளி என்னும் பெயருடைய ஊர்களில் பிறந்ததாகத் தெரிகின்றது. எருமை வெளியனார் என்பது ஒருவர் பெயர். வீரை வெளியனார் என்பது மற்றொருவர் பெயர். அவ் விருவரும் முறையே எருமை வெளியிலும், வீரை வெளியிலும் பிறந்தவ ரென்பது வெளிப்படை. அரணும் அமர்க்களமும் தமிழகத்தில் முன்னாளில் கோட்டை கொத்தளங்கள்…
ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 17
(ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 16. தொடர்ச்சி) ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 17 அத்தகைய சிற்றூர்களில் ஒன்று இப்பொழுது சித்தூர் என்னும் பெயரோடு ஒரு சில்லாவின் தலைநகராக விளங்குகின்றது. வட ஆர்க்காட்டில் சிற்றாமூர் என்னும் பெயருடைய ஊர் சமணர்களால் பெரிதும் போற்றப்படுவதாகும். பழைய சிவத்தலங்களில் ஒன்று சிற்றேமம் என்று பெயர் பெற்றது. அது திரு என்னும் அடை கொண்டு திருச்சிற்றேமம் ஆயிற்று. நாளடைவில் அப்பெயர் திரிந்து திருச்சிற்றம்பலம் என வழங்குகின்றது. நெடுமையும் குறுமையும் சில ஊர்களின் நெடுமையும் குறுமையும் அவற்றின் பெயர்களால்…
ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 16
(ஊரும்பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 15 தொடர்ச்சி) ஊரும் பேரும் 16 மன்னார் கடற்கரையில் முத்துப் பேட்டை என்னும் ஊர் உளது. கடலில் மூழ்கி முத்தெடுக்கும் பரதவர் முன்னாளில் அங்கே சிறந்திருந்தார்கள். முத்து வேலை நிகழ்ந்த இடம் முத்துப் பேட்டையென்று பெயர் பெற்றது. இப்பொழுது அங்குள்ள மகமதியர் சங்குச் சலாபத்தை நடத்தி வருகின்றார்கள். வட ஆர்க்காட்டிலுள்ள வாலாசா பேட்டை மகமது அலியின் பெயரால் நிறுவப்பெற்ற நகரமாகும்.+1 பதினெட்டு பேட்டைகளைத் தன்னகத்தே கொண்டு விளங்கிய அந் நகரம் பஞ்சு வியாபாரத்திலும், கூல வாணிகத்திலும் முன்னணியில் நின்றது….
ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 15
(ஊரும்பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 14 தொடர்ச்சி) ஊரும் பேரும் 15 தொண்டை நாட்டில் ஓர் ஊர் பில வாயில் என்று பெயர் பெற்றிருந்தது. நாளடைவில், ஊர் என்னும் சொல் அப் பெயரோடு சேர்ந்து பிலவாயிலூர் என்று ஆயிற்று. அப்பெயர் குறுகி வாயிலூர் என வழங்கிற்று. இந் நாளில் அது வயலூர் எனச் சிதைந்தது. செங்கற்பட்டைச் சேர்ந்த திருவள்ளுர் வட்டத்தில் அவ்வூர் உள்ளது.9 முற்றம் வாயிலைப் போலவே முற்றம் என்ற சொல்லும் சில ஊர்ப் பெயர்களில் அமைந்திருக்கக் காணலாம். சங்க இலக்கியத்தில் குளமுற்றம் என்ற ஊர் குறிக்கப்பட்டிருக்கிறது….
ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 14
(ஊரும்பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 13 தொடர்ச்சி) ஊரும் பேரும் – 14 3. குடியும் படையும் குடியும் படையும் நாடாளும் அரசனுக் குரிய அங்கங்கள் என்று திருவள்ளுவர் கூறியருளினார்1. ஆதியில் தமிழகத்தில் எழுந்த குடியிருப்பும் அதனைப் பாதுகாக்க எழுந்த படையிருப்பும் ஊர்ப் பெயர்களால் ஒருவாறு விளங்கும். இக் காலத்தில், இல் என்பது பெரும்பாலும் மக்கள் வாழும் வீட்டைக் குறிப்பதாகும். ஆயினும், அச்சொல் சில பழமையான ஊர்ப் பெயர்களிற் சேர்ந்திருக்கின்றது. திருச்சி நாட்டிலுள்ள ஊர் ஒன்று, அன்பில் இல் என்னும் அழகிய பெயரைப் பெற்றது.2 அன்பின் இருப்பிடம்…