திருக்குறள் அறுசொல் உரை – 103. குடி செயல் வகை : வெ. அரங்கராசன்
(திருக்குறள் அறுசொல் உரை – 102. நாண் உடைமை தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை 2. பொருள் பால் 13.குடி இயல் அதிகாரம் 103. குடி செயல் வகை குடும்பத்தை, குடியை உயர்த்துவாரது செயற்பாட்டு ஆளுமைத் திறன்கள். ”கருமம் செய”ஒருவன், ”கைதூவேன்” என்னும் பெருமையின், பீ(டு)உடைய(து) இல். ”குடும்பக் கடமைசெயக் கைஓயேன்” என்பதே பெரிய பெருமை. ஆள்வினையும், ஆன்ற அறிவும், எனஇரண்டின் நீள்வினையால் நீளும் குடி. நீள்முயற்சி, நிறைஅறிவு சார்ந்த தொடர்செயல் குடியை வாழ்விக்கும். “குடிசெய்வல்” என்னும்…