அரசியலில் திரைப்புள்ளிகள் – இரசினி, குட்பு
அரசியலில் திரைப்புள்ளிகள் – இரசினி, குட்பு அரசியலில் பங்கேற்க யாவருக்கும் உரிமையுண்டு. பிற துறையைச் சேர்ந்தவர்கள் பங்கேற்பதுபோல் திரைத்துறையினருக்கும் அந்த உரிமையுண்டு. என்றாலும் நாட்டு மக்களுக்கு எத்தொண்டும் ஆற்றாமல், அவர்களின் சிக்கல்களைத் தீர்ப்பதற்காகக் குரல் கொடுக்காமல், அவர்களின் போராட்டக்களங்களில் தோள் கொடுக்காமல், நன்கறிநிலை(popularity) உள்ளதால் மட்டுமே அரசியல் தலைமையையும் நாட்டுத்தலைமையையும் எதிர்பார்த்து அரசியலில் காலடி எடுத்து வைப்பது என்பது வீண் கனவே!. அப்படி எந்த ஒரு துரும்பையும் மக்களுக்காக எடுத்துப் போடாதவர்களை அரிசியலில் இறங்கவும் முதல்வர் பதவியை அணி செய்யவும் சிலர் அழைக்கின்றார்கள்…