பெருங்கவிக்கோவின் சேதுகாப்பியம் வரலாற்று ஆவணம் – மறைமலை இலக்குவனார்

பெருங்கவிக்கோவின் சேதுகாப்பியம் 3 மறுமலர்ச்சிக் காண்டம் நூலிற்கு முனைவர் மறைமலை இலக்குவனாரின் அணிந்துரை பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்கள் நாடறிந்த நற்றமிழ்ப்பாவலர். உலகைப் பலமுறை (49 தடவை) வலம் வந்த ஒரே தமிழறிஞர். ‘கெடல் எங்கே தமிழின் நலம்!அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க!’ எனும் புரட்சிக்கவிஞரின் ஆணையைத் தம் வாழ்நாள்பணியெனக் கொண்டு செயலாற்றும் தமிழ்மறவர். கரிகாற்பெருவளத்தானையும் சேரன் செங்குட்டுவனையும் நிகர்த்த தமிழ் மறம் கொண்ட தமிழ் உரிமைப்போராளி. ‘நாமார்க்கும் குடியல்லோம் நமனையஞ்சோம்’என்னும் திருநாவுக்கரசரின் வாக்கையேற்றுத் தமிழ்ப்பகை கடியும் தறுகண்மை மிக்கவர். தமிழுக்குச் செம்மொழித்தகுதிப்பேறு வழங்கவேண்டுமென அற்றைத்…

வாழ்கின்றவரை வாழ்த்திடுவோம்! மடிந்தவரை மறந்திடுவோம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

வாழ்கின்றவரை வாழ்த்திடுவோம்! மடிந்தவரை மறந்திடுவோம்!   “அதிகாரியின் நாய் இறந்தால் ஊரே திரண்டு உடன் வரும். அதிகாரி இறந்தாலோ அந்த நாய் மட்டும்தான் உடன் வரும்” என்பார்கள். இவ்வாறு ஆதாயத்திற்காக இருப்பவரைப் போற்றுவதும் ஆதாயம் இல்லை என்பதற்காக இறந்தவரைப் புறக்கணிப்பதும் இழிவான செயலாயிற்றே! ஆனால், தலைப்பு வேறுவகையாக உள்ளதே என எண்ணுகின்றீர்களா? அதற்கு விளக்கம் காணும் முன்பு ஆன்றோர்கள் சொன்ன செய்திகள் சிலவற்றைப் பார்ப்போம்.   உலகில் மனித இனம்தோன்றிய பகுதி தமிழ்நாடு. அவ்வாறு தோன்றிய பொழுது தமிழ்நாட்டின் நிலப்பரப்பு மிக அகன்று இருந்தது….

உலகப் பண்பாடுகள் தமிழ்ப் பண்பாட்டின் கூறுகளே!

உலகப் பண்பாடுகள் தமிழ்ப் பண்பாட்டின் கூறுகளே!    நடுநிலக் கடலைச் சூழ்ந்து வாழ்ந்த மக்களினம் இந்திய தீவக்குறையில் தோன்றியது என்றே தீர்மானிக்கலாம்… இத்தீவக்குறை, தென்னிந்தியாவை ஆப்பிரிக்காவோடு இணைந்திருந்ததும், சிந்துகங்கை ஆறுகளின் பள்ளத்தாக்கு அமையாத காலத்தில் கடலில் மூழ்கியதுமான குமரிக் கண்டத்தில் இருந்ததாகும். இம்மாநிலமே திராவிடரின் மூலத் தாயகமாகும். …..   …..   ….. எனவே, திராவிடப் பண்புகள் இந்திய நாகரிகத்தில் மட்டும் காணப்படவில்லை; சிறந்த நாகரிகச் சிறப்பினை அடைந்திருந்த கிரீக்கு, சுமேரியா, பாபிலோனியா, பாலினீசியா போன்ற நாடுகளிலும் மற்றும் பண்டை உலகின் நாகரீக நாடுகள் பலவற்றிலும்…