இலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன்
(இலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி 2/3 தொடர்ச்சி) இலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி 3/3 ஆளுமை நெறி : தமிழ்நாட்டில் தமிழுக்கும் தமிழர்க்கும் தலைமை இல்லாச் சூழலே நாம் அடையும் அனைத்து இன்னல்களுக்கும் காரணமாக அமைகின்றது. தமிழர்க்கு எதிரான துயரங்களைக் களைய முடிவெடுக்க வேண்டியவர்கள் பிற மொழியாளர்களாகவே உள்ளனர். தமிழ்ப்பகுதிகளைத் தமிழ் நிலத்துடன் சேர்ப்பது, சிங்களவர்கள் மீனவர்களுக்கு எதிரான படுகொலைகள், ஈழத்தில் உருவாக்கப்பட்ட பேரின அழிவு முதலானவற்றில் தலைமைப் பொறுப்புகளில் உள்ள பிறர், அவரவர் மொழியினருக்கும் இனத்தினருக்கும் சார்பாகவும் நமக்கு எதிராகவும் நடப்பதே …