குமுக வளர்ச்சி 3 – முனைவர் இராம.கி.
(சூலை 05, 2015 தொடர்ச்சி) குமுக வளர்ச்சி 3 இந்த வேலிக்கருவையாற்றான் நம்மூர்க் கண்மாய்களுக்கு நீர்வரத்துள்ள கால்கள் அடைபட்டுப் போயின. கண்டதேவிக் கோயிற்குளம் தவிர வேறெந்தக் குளமாவது நம் பக்கத்தில் நிறைந்து பார்த்திருக்கிறீர்களா? சற்று எண்ணிப்பாருங்கள். எப்பொழுது நம் ஊர்க்கண்மாய்கள் நிறையவில்லையோ, அப்புறம் நம்வீட்டுக் கிணறுகளிலும், கேணிகளிலும் நீருற்றுகள் தூர்ந்துதான் போகும். 30-80 அடிவரை இருக்கும் நிலத்தடி நீர்ப்படுகை வற்றிப்போனால் பின் புரைக்கிணறுகளில்(bore-wells) தான் நாம் உயிர்பிழைக்கவேண்டும். அதன் ஆழம் 120 அடிகளிலிருந்து 250 அடிவரை போகும். இப்பொழுதெல்லாம் புரைக்கிணறுகளை 500 அடிகள்வரையும்…