எழுவரின் விடுதலைக்கு முயலும் அரசிற்கு விடுப்பு வழங்க மனம் வராதது ஏன் என்று தெரியவில்லை. வழக்கு நிலுவையில் இருக்கும்பொழுது காப்புவிடுப்பில்(பரோலில்) அனுப்பக்கூடாது என விதி உள்ளதாகத் தமிழ்நாடு சிறைத்துறைத்தலைவர் எழுத்து மூலமாகத் தமிழ்க்காப்புக்கழகத்திற்குத் தெரிவித்துள்ளார். தனி நேர்வாகவும் விதித் திருத்தமாகவும் ஏதும் ஒரு வகையில் விடுப்பிலாவது இவர்களை இவர்கள் போன்றோரையும் அனுப்புவதே அறமாகும். அவ்வாறு அனுப்புவதால் விடுப்புக் கால நன்னடத்தை அடிப்படையில் விடுதலைக்கான பாதையை  எளிதாக்கலாம். அவ்வாறு இல்லையேல் அதனைக் காரணம்காட்டியே விடுதலையை மறுக்கலாம்!  நளினிக்குத் தந்தையை உயிரோடு பார்க்க வாய்ப்பு மறுக்கப்பட்ட கொடுஞ்செயல்போல்,…