குருதிக்கொடை என்னும் அறம் – ப.கண்ணன்சேகர்
குருதிக்கொடை என்னும் அறம் நதிநீர் ஓட்டத்தால் நாடெலாம் செழித்திட நாளத்தின் குருதியால் நன்னுடல் தழைத்திடும்! அதிகாலைப் பயிற்சியால் ஆரோக்கியம் கண்டிட அழற்சியிலா உடலே அன்றாடம் உழைத்திடும்! விதியினை மாற்றியே வீழ்வதைத் தடுத்திட வெள்ளையோடு சிவப்பணு வேரெனக் காத்திடும்! நிதிபடைத்து நானிலத்தில் நிம்மதி காண்போரும் நிச்சயமாய்க் குருதியால் நலவாழ்வு வந்திடும்! உடல்முழுக்கப் பிராணத்தை உந்தும்நிலை செய்திட உதவுகிற பெரும்பணியே ஓடுகின்ற இரத்தமே! முடக்கிடும் கிருமிகளை முற்றிலும் அகற்றிட முதன்மைச் சேவகனாய் முயன்றிடும் இரத்தமே! திடமென இதயத் தெளிவான ஓட்டத்தை தினந்தோறும் தருவதும் தேகத்தில் இரத்தமே! மடமை…