தோழர் தியாகு எழுதுகிறார் 47: நானும் தேச விரோதி!- மருதமுத்து
(தோழர் தியாகு எழுதுகிறார் 46 தொடர்ச்சி) இனிய அன்பர்களே! அம்பேத்துகரைக் காவிச் சிமிழுக்குள் அடைக்க இந்துத்துவக் கயவர்கள் செய்யும் முயற்சி கண்டு வெகுண்டெழுந்து பேராசிரியர் மருதமுத்து அவர்கள் அம்பேத்துகர் நினைவு நாளில் எழுதியுள்ள முகநூல் இடுகையை இன்றைய தாழி மடலில் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்: நானும் தேச விரோதி! ஆம், மருதமுத்துவாகிய நான் அழுத்தந்திருத்தமாக அறிவிக்கிறேன்— நானும் தேசவிரோதி! இன்று வரை இந்துத்துவா வாதிகள் எல்லோரும் தந்தை பெரியாரைத் தேச விரோதி என்கிறார்கள், வெள்ளைக்காரனின் கைக்கூலி என்கிறார்கள். (எச்சு.இரசாவின் நம் ஒளியலைப் பேச்சு) நேற்றுவரை தந்தை அம்பேத்துகரையும் தேசவிரோதி என்றார்கள், வெள்ளைக் காரனின்…
குணக்குன்றர் குருமூர்த்தி வாழ்க நூறாண்டு! – இலக்குவனார் திருவள்ளுவன்
குணக்குன்றர் குருமூர்த்தி வாழ்க நூறாண்டு! பதிப்பகங்கள், பணப்பெருக்கத்தை நோக்கமாகக் கொண்டும் செயல்படலாம். எனினும் தொடக்கக்காலப் பதிப்பகங்கள் இலக்கியப்பணிகளுக்கே முதன்மை யளித்தன. பழைய இலக்கியங்களையும் புதிய இலக்கியங்களையும் புலவர்களையும் இலக்கியவாணர்களையும் கவிஞர்களையும் கட்டுரையாளர்களையும் நூலாசிரியர்களையும் மக்களுக்கு அறிமுகப் படுத்துவன பதிப்பகங்களே! இலக்கியங்களின் தொடர்ச்சிக்குப் பாலமாகச் செயல்படுவன பதிப்பகங்களே! அத்தகைய பதிப்பகங்களில் குறிப்பிடத்தக்க சிறப்புடையது மணிவாசகர் பதிப்பகம். சீர்மிகு மணிவாசகர் பதிப்பகத்தில் ஒருவர் 40 ஆண்டுகளாகப் பணியாற்றுகின்றார் எனில், மிகச்சிறந்த இலக்கியத் தொண்டினைத் தொய்வின்றி ஆற்றுவதாகத்தானே பொருள்! அததகைய அருந்திறலாளர் குணக்குன்றர் இராம.குருமூர்த்தி ஆவார். …