ஒரே நாளில் 300 திருக்குறள் படிக்க… 300 குறளையும் இசையோடு கேட்டு நெஞ்சில் பதிக்க…   கடந்த இரண்டு திங்களாக திருக்குறளை மாணவர்கள் நெஞ்சில் பதிய வைக்கிற ஒரு பயிற்சிக் கட்டகம் உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தொடர்ந்து இயங்கினேன். திரு பழனிச்சாமி சேரிபாளையம் தமிழாசிரியர், திரு.கல்லை அருட்செல்வன், திரு பல்லடம் முத்துக்குமரன், திரு. ஐயாசாமி, திரு கணேசன் போன்ற நண்பர்களின் உதவியோடு, 1330 திருக்குறளையும் ஆய்வு செய்துமாணவர்கள் எளிமையாகப் படித்துப் புரிந்து கொள்ளக்கூடிய திருக்குறளை வரிசைப்படுத்தி, அதிலுள்ள கடினச் சொற்களுக்கு உரிய பொருளை…