இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 34: ம. இராமச்சந்திரன்
(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 33 தொடர்ச்சி) இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 34 கையறு நிலைக் கவிதைகள் கையறு நிலை என்பது புறப்பொருள் பாடல்களில் அமைந்துள்ள ஒரு துறையாகும். அரசன் இறப்ப அவனைச் சார்ந்தோர் அவ்விறந்து பாட்டைச் சொல்லி ஒழுக்கம் தளர்தல் என்பது பொருளாம். ‘செய்கழல் மன்னன் மாய்ந்தெனச் சேர்ந்தோர் கையற வுரைத்துக் கைசேர்ந் தன்று’ 90 இறந்தனுடைய புகழை எடுத்துக்கூறி இரங்கினும் கையறுநிலை என்னு ம் துறையாம். ‘கழிந்தோன் தன்புகழ் காதலித் துரைப்பினும் மொழிந்தனர் புலவர் அத்துறை…
குறள் நெறி – மே.சி.சிதம்பரனார்
குறுமை என்ற பண்பின் பெயர் அப்பண்பினையுடைய பாவிற்குப் பெயராகி, மை விகுதி குன்றி, அள்சாரியை பெற்று, குறு + அள் = குறள் என்றானது. ஒரு தடியில் துண்டித்ததடி குறுந்தடி. ஒரு அரிசியில் துண்டித்த பகுதி குறுநொய் (குறுணை) என்றாங்கு முதற்பாவான ஒரு வெண்பாவின் நான் கடியிற்றுண்டித்த ஒன்றே முக்காலடி, குறள் எனப் பண்பாகு பெயர் பெற்றது. இக்குறட்பாக்களாலாகிய நூலுக்கும் குறள் என்றது கருவியாகு பெயராய் வந்தது. இங்ஙனம் இருமுறை ஆகுபெயர் மடங்கி வரலால் இருமடியாகு பெயரென்றுங் கூறலாம். மேலும் சிறப்புக்குறித்த திரு என்ற…