குறள் வழிச் சென்றால் உலகிற்கு நன்னெறி காட்டியவர்கள் என்ற பெருமையை அடையலாம்.   தமிழ் நூல்களையெல்லாம் பதினெட்டாம் பெருக்கில் ஆற்றில் போடச் செய்தும், நெருப்பில் பொசுக்கிப் பாழாக்கியும் விட்டனர் தமிழ்ப் பகைவர்கள். எஞ்சியிருப்பது குறள் ஒன்றேயாகும். நமது திருவள்ளுவர் வகுத்த இக்குறள் வழிச்சென்றால் நம் நாட்டுக்கு மட்டுமின்றி வடநாட்டுக்கும், உலகத்துக்கும்கூட நாம் நன்னெறி காட்டியவர்கள் என்ற பெருமையை மீண்டும் அடையலாம்.   திருவள்ளுவர் இன்றைக்கு ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்டவர் என்பது இன்று பலரும் ஒப்புக்கொண்டுள்ள செய்தி, ஆதலின் அவர்தம் காலத்தில் கிறித்தவம், இசுலாமியம்,…