பிறரை உயர்த்தும் நன்மணி சுவேதா – விவேகானந்தன் ஆர்.
தான் வந்த வழியை நினைத்துப் பிறரை உயர்த்தும் நன்மணி சுவேதா முகநூலில் பகிரப்பட்ட நரிக்குறவர் சமூத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் வாழ்க்கையை கோரா நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்வடைகிறேன். மூல எழுத்தர் திரு. அ.சேக்காதர் இப்ராகீம் அவர்களுக்கு நன்றி. பதிவு பெரிது, அதைவிடப் பயணமும் பெரிது, தான் பிறந்த சமூகத்திற்கு முன்மாதிரியான நிகழ்வு. நெஞ்சார்ந்த வாழ்த்துகள். இனத்தோடு ஊர்விட்டு ஊர் நகர்ந்து கொண்டே இருப்பவர்கள்தான் நரிக்குறவர்கள். இவர்களில் சுவேதா, தமிழ்நாட்டின் நரிக்குறவர் இனத்தின் முதல் பொறியியல் பட்டதாரி என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார். ஆனால், இது…
குறவர் – பாவேந்தர் பாரதிதாசன்
காடைக் காரக் குறவன் வந்து பாடப் பாடக் குறத்தி தான் கூடக் கூடப் பாடி ஆடிக் குலுங்கக் குலுங்கச் சிரித்தனள் சாடச் சாட ஒருபுறப் பறை தக தக வென் றாடினாள் போடப் போடப் புதுப் புதுக்கை புதுப் புதுக்கண் காட்டினாள் ஓடிச் சென்று மயிலைப் போல ஒதுங்கி நிலையில் நிமிர்ந்துமே மூடி மலர்க்கை திறந்து வாங்கி முறிப்பும் முத்தமும் குறித்தனள் தேடத்தேடக் கிடைப்ப துண்டோ சிறுத்த இடுப்பில் நொடிப்பு கள் ஈடுபட்டது நேரில் முத்தமிழ் ஏழை மக்களின் வாழ்விலே!