தமிழர் இல்லறம் (தொடர்ச்சி) – சி.இலக்குவனார்
(இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 15 – தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 16 7. இல்லறம் தொடர்ச்சி திருமணத்தில் பெண்ணுக்குத் தாலியணிதல்பற்றி ஒன்றும் கூறப்பட்டிலது. பெண்ணுக்குத் தாலி எனும் அணி உண்டு என்பது கணவனோடு வாழுகின்றவர்களை “வாலிழை மகளிர்” என்று அப் பாடலில் குறிப்பிட்டுள்ளமையால் தெரியலாம். `வாலிழை’- உயர்ந்த அணி- என்பது தாலிiயைத்தான் குறிக்கும். திருமணத்தில் மணமகளுக்குத் தாலி கட்டுதல் தமிழரிடையே மட்டும் காணப்படும் தொன்றுதொட்டு வரும் பழக்கமாகும். திருமணத்தோடு தொடர்புடைய இன்னொரு சடங்கும்…
குறிஞ்சி நிலத்தவர் உணவு – மா.இராசமாணிக்கம்
குறிஞ்சி நிலத்தவர் உணவு சோழநாட்டுக் குறிஞ்சி நிலமக்கள் தேனையும் கிழங்கையும் உண்டார்கள். பிற நிலத்தார்க்கும் விற்று மீன், நெய்யையும் நறவையும்(தேன்) வாங்கிச் சென்றார்கள் (பொ.ஆ.படை அடி:214-15). சிறப்பு நாள்களில் நெய் மிக்க உணவு உட்கொள்ளப்பட்டது. (குறிஞ்சிப்பாட்டு அடி: 304). நன்னனுக்குரிய சவ்வாது மலையில் அடிவாரத்தில் இருந்த சிற்றூர்களில் வாழ்ந்த மக்கள் திணைச்சோறும் நெய்யில் வெந்த இறைச்சியையும் உண்டார்கள். (மலைபடுகடாம் அடி:168-169). நன்னனுடைய மலைகளைச் சேர்ந்த குறிஞ்சி நிலத்தார் பெண் நாய் கடித்த உடும்பின் இறைச்சியையும் கடமான் இறைச்சியையும் பன்றி இறைச்சியையும் உண்டனர். நெல்லால் சமைத்த…