(திருக்குறள் அறுசொல் உரை: 127. அவர்வயின் விதும்பல் தொடர்ச்சி)       3. காமத்துப் பால் 15. கற்பு இயல் 128. குறிப்பு அறிதல்        காதலர்  தம்தம்  உள்ளத்துள்ள்         குறிப்புகளைக், குறிப்பாக உணர்த்தல்   (01-05 தலைவன் சொல்லியவை)        கரப்பினும், கைஇகந்(து) ஒல்லாநின் உண்கண்,       உரைக்கல் உறுவ(து)ஒன்(று) உண்டு. மறைத்தலையும் மீறி, உன்கண்கள் குறிப்பு ஒன்றைச் சொல்லுகின்றன.   கண்நிறைந்த காரிகைக் காம்(பு)ஏர்தோள் பேதைக்குப்,       பெண்நிறைந்த நீர்மை பெரிது கண்கொள்ளா அழகுக் காதலிக்குப் பெண்மை நிறைபண்பே, பேர்அழகு….