மத நம்பிக்கைகளில் அரசு குறுக்கிடலாமா? – இலக்குவனார் திருவள்ளுவன்
மத நம்பிக்கைகளில் அரசு குறுக்கிடலாமா? மத நம்பிக்கைகளில் அரசு குறுக்கிடக் கூடாது எனக் கூக்குரல்கள் எழும்புகின்றன. மூட நம்பிக்கைகளை அறுவடை செய்வோர், தங்கள் அறுவடைக்குக் குந்தகம் விளையுமோ என அஞ்சி இவ்வாறு எதிர்க்கின்றனர். உலக நாடுகள் அனைத்திலுமே மூட நம்பிக்கைகளுக்கு எதிரான சீர்திருத்தக் கருத்துகள் அந்தந்த நாட்டு அரசுகளின் மூலம்தான் நிறைவேறியுள்ளன. சீர்திருத்தவாதிகள் தங்கள் கருத்துகளைப் பரப்பி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் அவற்றிற்குச் சட்ட ஏற்பு கொடுத்து நிலையாக மாற்றுவதற்கு அரசுகளே காரணமாக அமைகின்றன. இந்தியாவிலும் அப்படித்தான். 1829இல் இராசாராம் மோகன்ராய் துணையுடன் வில்லியம்…