பொற்காசுகளால் பொலிந்த தமிழகம் – அன்றே சொன்னார்கள் – இலக்குவனார் திருவள்ளுவன்

பொற்காசுகளால் பொலிந்த தமிழகம் நாணயங்கள்  பயன்படுத்தும் காலம் வந்தபொழுது மாழைகளால் – உலோகங்களால் – காசுகள் உருவாக்கிப் பயன்படுத்தும் சூழல் ஏற்பட்டது. (இ)லிதியன் மக்கள்தாம் முதன் முதலில் தங்கத்திலும் வெள்ளியிலும் காசுகள் அடித்ததாக கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த எரொதத்தசு (Herodotus) என்னும் கிரேக்க  வரலாற்று ஆசிரியர் குறிப்பிடுகின்றார். எனினும் எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்குத் தமிழ்நாட்டில் பொற்காசுகள் மிகுதியாகப் பயன்பாட்டில் இருந்துள்ளன. மக்களுக்கு உவமையாகக் கூறும் அளவிற்கு அனைத்து நிலைகளிலும் பயன்பாட்டில் இருந்துள்ளமை அக்கால மாழை (உலோக)ப் பயன்பாட்டையும் செல்வச் செழிப்பையும் நமக்கு…

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 11 : யார் யாரையோ இணைப்பது அன்புதான்! – இலக்குவனார்திருவள்ளுவன்

(சங்கப்புலவர்கள் பொன்னுரை – 10 : பசியும் நோயும் இல்லாமல் போகட்டும்!- தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 11  யார் யாரையோ இணைப்பது அன்புதான்!  “யாயும் ஞாயும் யார் ஆகியரோ?எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?யானும் நீயும் எவ்வழி அறிதும்?செம்புலப் பெயல் நீர் போலஅன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.”               – செம்புலப் பெயனீரார்               – குறுந்தொகை : பாடல் 40 பொருள்: யாய்=என் தாய்;…

தமிழர் பழக்க வழக்கங்கள் 2. – சி.இலக்குவனார்

 (இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  24 –  தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  25 13. பழக்க வழக்கங்கள் (தொடர்ச்சி) பூதப் பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு தன் கணவனை இழந்து தீப்பாயச் சென்றவள் தன்னை அவ்வாறு செய்ய வேண்டாவென்று தடுத்தாரை நோக்கிக் கூறியதாக உள்ள புறநானூற்றுப் பாட்டில், “அணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந் திட்ட  காழ்போல் நல்விளர் நறுநெய் தீண்டாது  அடையிடைக் கிடந்த கைபிழி பண்டம்  வெள்ளெட் சாந்தொடு புளிப்பெய்து அட்ட  வேளை வெந்தை வல்சி யாகப்  பரற்பெய்…

நச்செள்ளையாரும் பிறரும் – இரா.இராகவையங்கார்

நல்லிசைப் புலமை மெல்லியலார்கள் – இரா.இராகவையங்கார். : 21   (நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 20. தொடர்ச்சி) 6. காக்கைபாடினியார் நச்செள்ளையார் [ மகாமகோபாத்தியாயர் பிரும்ம சிரீ முனைவர் உ.வே. சாமிநாதையரவர்கள் செவ்வனம் ஆராய்ந்து வெளியிட்ட பதிற்றுப்பத்துள் ‘நூலாசிரியர்கள் வரலாறு’ பார்க்க. ] இவர் பதிற்றுப்பத்தின்கணுள்ள ஆறாம்பத்தால் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்னுஞ் சேரனைப் புகழ்ந்து பாடி, அவனாற் கலனணிக என்று ஒன்பது துலாம் பொன்னும் நூறாயிரங்காணமும் அளிக்கப் பெற்று, அவன் பக்கத்து வீற்றிருத்தற் சிறப்பும் எய்தியவர். பாடினி, செள்ளை என்னும் பெண்பாற்பெயர்களானும் கலனணிதற்குப்…

குறுந்தொகை: தொடர் சொற்பொழிவு தொடக்க விழா

ஆனி 01, 2050 ஞாயிறு 16.06.2019 மாலை 4.00 வள்ளல் கு.வெள்ளைச்சாமி அரங்கம் தலைநகர்த் தமிழ்ச் சங்க வளாகம் குறுந்தொகைத் தொடர் சொற்பொழிவு தொடக்க விழா தலைமை: வள்ளல் கு.வெள்ளைச்சாமி தொடக்கி வைப்பவர்: முனவர் ஆறு.அழகப்பன் தொடர் சொற்பொழிவாளர்: முனைவர் முகிலை இராசபாண்டியன்

அகநானூற்றில்  ஊர்கள்  – 2/7: – தி. இராதா

அகநானூற்றில்  ஊர்கள்  – 2/7 அழுங்கல்      பல விழுதுகளைக் கொண்ட ஆலமரத்தில் அமர்ந்திருக்கும் பறவைகளின் ஒலியைக் கொண்ட ஊர் அழுங்கல் ஆகும்.      “பல்வீழ் ஆலப்போல      ஓலி அவிந்தன்று இவ் அழுங்கல் ஊரே” (அகநானூறு 70)      “என்னும் நோக்கும் இவ் அழுங்கல் ஊரே”  (அகநானூறு 180) என்னும் வரிகள் உணர்த்துகின்றன.      “அன்றை அன்ன நட்பினன்       புதுவோர்த்து அம்ம அவ் அழுங்கல் ஊரே” என்று குறுந்தொகையும் அழுங்கல் ஊரின் சிறப்பை எடுத்துரைக்கின்றது.      கரிய கூந்தலையும் திருத்த முறச்…

பட்டியல் சாதியர் நலன்காக்கக் கைக்கட்டுடன் மடல் எழுதிய முதல்வர் பழனிச்சாமி

பட்டியல் சாதியர் நலன்காக்கக் கைக்கட்டுடன் மடல் எழுதிய முதல்வர் பழனிச்சாமி   மததிய பாசக அரசு வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் பட்டியல் சாதியர், பட்டியல் இனத்தவர், பிற்பட்டோர், சிறுபான்மையர் நலனுக்கு எதிராகவே நடந்து கொள்கிறது.  அவற்றில் ஒன்றுதான் கடந்த ஆண்டு தனியார் நிறுவனங்களில் உயர்கல்வி பயிலும் மாணவர்களில் பட்டியல் சாதியர், பட்டியல் இனத்தவர், பிற பிற்படுத்தப்பட்டவர்களுக்கான கல்வி  உதவித் தொகையை நிறுத்துவது. அவர்கள் செலுத்திய கல்விக்கட்டணத்தைத் திரும்பப்பெறும் வகையில் தரப்பட்ட இவ்வுதவித்தொகையை நரேந்திர(மோடி) அரசு  கடந்த ஆண்டு நிறுத்தி விட்டது.  எனினும் தமிழ்நாடுஅரசு நிறுத்தவில்லை….

நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 4.

(நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 3. தொடர்ச்சி) நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- 4. ஆதிமந்தியார் இவர் பெண்பாலர் என்பதும், இவர் நல்லிசைப்புலமை வாய்ந்தவர் என்பதும், ‘மக்க ணுதலிய வகனைந் திணையுஞ் சுட்டி யொருவர் பெயர்கொளப் பெறாஆ’ என்னும் அகத்திணையியற் சூத்திரவுரையில் நச்சினார்க்கினியர், ‘மள்ளர் குழீஇய விழவி னானும் மகளிர் தழீஇய துணங்கை யானும் ண்டுங் காணேன் மாண்டக் கோனை யானுமோ ராடுகள மகளே யென்கைக் கோடீ ரிலங்குவளை நெகிழ்த்த பீடுகெழு குரிசிலு மாடுகள மகனே’. (குறுந்தொகை-31) என்னும் பாடலை எடுத்தோதி, ‘இது காதலற் கெடுத்த…