காந்திநகர் நூலக வாசகர் வட்டத்தில் தமிழ்க்குறும்பா நூற்றாண்டு விழா
அடையாறு காந்திநகர் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் தமிழ்க் குறும்பா நூற்றாண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு கவிஞரும் இதழாளருமான மு.முருகேசு தலைமையேற்றார். வாசகர் வட்டத் தலைவர் எழுத்தாளர் வையவன் அனைவரையும் வரவேற்றார். நூலகர் நீ.அகிலன், ஓவியர் செந்தமிழ்ச் செல்வன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில், கவிஞர்கள் க.நா.கல்யாண சுந்தரம், வசீகரன், அருணாச்சல சிவா, யுவபாரதி, சு.கணேசுகுமார், துரை.நந்தகுமார், வானவன், தயானி தாயுமானவன் முதலரன 25-க்கும் மேற்பட்ட கவிஞர்கள் குறும்பாக் கவிதைகளை (ஐக்கூ)வாசித்தனர். தமிழின் மூத்த குறும்பாக் கவிஞர் ஓவியர் அமுதபாரதி, தனது குறும்பாக் கவிதைப் பட்டறிவுகளைப் பகிர்ந்துகொண்டார்….