புதுமையான முறையில் கவிஞர் குடியிருப்பில் வெளியிடப்பட்ட குறும்பா நூல்
புதுமையான முறையில் கவிஞர் குடியிருப்பில் வெளியிடப்பட்ட குறும்பா நூல் கவிஞர் சென்சி எழுதிய ‘மகரந்தத் துணுக்குகள்’ குறும்பா (ஐக்கூ கவிதை) நூல் வெளியீட்டு விழா, நூலாசிரியர் தங்கியிருக்கும் சென்னை இராயப்பேட்டை கவுடியா மடம் சாலையிலுள்ள தலைமை மாளிகை (சுப்ரீம் மேன்சன்) தரைதளத்தில் புதுமையான முறையில் வெளியிடப்பட்டது. இவ்விழாவில் உறவினர்களும் நண்பர்களும் மட்டுமில்லாமல், கவிதை நூலை அச்சிட்ட கேபிடல் அச்சக ஊழியர்களும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. இவ்விழாவிற்குத் தலைமையேற்று, கவிதை நூலினைப் பண்ணைத் தமிழ்ச் சங்க அமைப்பாளர் கவிஞர் துரை.வசந்தராசன் வெளியிட்டார். கவிஞர் மு.முருகேசு பெற்றுக்கொண்டார். கவிதை நூலைத் திறனாய்வு செய்து…
இதழ்களின் மேல் கருவண்டு – அபிநயா, துபாய்
இதழ்களின் மேல் கருவண்டு வீட்டினுள் விழுந்தன வளர்பிறை வெண்மதிகள் வெட்டிய நகங்கள்’. பூச்சிக்கொல்லி மருந்தையும் குடிப்போம் அயல்நாட்டுப்பானம்! கோயிலுக்குக் குந்தகமென்றால் கருவறையும் அகற்றலாம் கருப்பை! இறைவனும் இறைவியும் இணக்கத்துடன் இணைந்தார்கள் அரவாணிகள்! நாத்திகனுக்குக் கோவிலிலென்ன வேலை? அன்னதானம்! இதழ்களின் மேல் கருவண்டு மச்சம்! அறைந்தாள் முத்தம் கொடுத்தான் அப்பா! இயற்கையும் உறைகூழ் கொடுத்தது நுங்கு! கூட்டமாய் வந்து உள்ளாடை திருடினார்கள் மணல் கொள்ளை! – அபிநயா, துபாய். தரவு : முதுவை இதயத்து
தமிழகத்துக் கவிஞர் மு.முருகேசுக்குக் குவைத்து நாட்டில் இலக்கிய விருது.
தமிழகத்துக் கவிஞர் மு.முருகேசுக்குக் குவைத்து நாட்டில் இலக்கிய விருது. தமிழகத்தைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேசுக்குக் குவைத்து நாட்டில் செயல்படும் வளைகுடா வானம்பாடிக் கவிஞர்கள் சங்கத்தின் சார்பாக விருது வழங்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேசு, கடந்த முப்பதாண்டு காலமாகத் தொடர்ந்து இலக்கியச் செயல்பாடுகளில் ஈடுபட்டு வருபவர். இவரது எழுத்து முயற்சியில் இதுவரை 15 கவிதை நூல்கள், 6 கட்டுரை நூல்கள், 6 தொகுப்பு நூல்கள், ஒரு சிறுகதை நூல், 100-க்கும் மேற்பட்ட சிறுவர் இலக்கிய குறுநூல்கள் வெளியாகியுள்ளன. வந்தவாசி நூலக…
குறும்பா விழா
மாசி 24,2046 / மார்ச்சு 1,2015
துளிப்பா விழா – மின்மினி + செல்லம் நிலையம்
மின்மினி + செல்லம் நிலையம் முப்பெருவிழா கார்முகிலோன் துளிப்பா விருது பாரதி துளிப்பா விருது பாரதி, பாசோ கவிமன்றம் ஆடி 11 , 2045 / சூலை 27, 2014 ஞாயிறு மாலை 5.15 மணி இரானடே நூலக அரங்கம், சென்னை 600 004