நூலில் வரக்கூடாக் குற்றங்கள் பத்து – பவணந்தி முனிவர், நன்னூல்
நூலில் வரக்கூடாக் குற்றங்கள் பத்து குன்றக் கூறல், மிகைபடக் கூறல், கூறியது கூறல், மாறுகொளக் கூறல், வழூஉச் சொல் புணர்த்தல், மயங்க வைத்தல், வெற்று எனத் தொடுத்தல், மற்று ஒன்று விரித்தல், சென்று தேய்ந்து இறுதல், நின்று பயன்இன்மை, எவை இவை ஈர் ஐங் குற்றம் நூற்கே குன்றக் கூறல் – குறித்த பொருளை விளக்குதற்கு வேண்டுஞ் சொற்களில் குறைவுபடச் சொல்லுதலும் , மிகைபடக் கூறல் – குறித்த பொருளை விளக்குதற்கு வேண்டும் சொற்களினும் அதிகப்படச் சொல்லுதலும் , கூறியது கூறல் –…