தோழர் தியாகு எழுதுகிறார் 145: வேங்கைவயல் குற்றப் புலனாய்வு பற்றிய குற்றாய்வு
(தோழர் தியாகு எழுதுகிறார் 144 :சாதி என்பது வதந்தி அல்ல! தொடர்ச்சி) வேங்கைவயல் குற்றப் புலனாய்வு பற்றிய குற்றாய்வு வேங்கைவயல் திண்ணியத்தை நினைவூட்டுவதாக உள்ளது என்பது இரண்டுக்கும் பகைப்புலமாக உள்ள சாதியப் பாகுபாட்டையும் ஒடுங்கியர் (தலித்து மக்கள்) மீதான தீண்டாமை இழிவையும் மனத்தில் கொண்டு சொல்லப்பட்டது. அதே போது வரலாற்றில் இருவேறு நிகழ்ச்சிகள் நூற்றுக்கு நூறு முழுதொத்தவையாக இருப்பதில்லை. ஒவ்வொன்றையும் உருத்திட்டமாகப் பகுத்தாய (concrete analysis of concrete data) வேண்டும். திண்ணியம் பற்றிய உருத்திட்டமான தரவுகள் அனைத்தும் ஐயந்திரிபறக் கிடைத்த பிறகே அது தொடர்பான நீதிமன்றத்…