குலசேகர ஆழ்வாரின் அருமையான உவமைகள் வழியாக குறிக்கோள், குறிக்கோளின்மீதுள்ள தீராப்பற்று, அதனை அடைதல் ஆகியவை குறித்து எண்ணிப்பார்ப்பது இந்தப்பதிவு. எந்தவொரு காதல் பாடலையும் அல்லது தெய்வபக்திப் பாடலையும் வெற்றி அல்லது குறிக்கோளுடன் ஒப்பிட்டுப்பார்க்கலாம். காதல் என்பதும் பக்தி என்பதும் ஒன்றின் மீதுள்ள ஏக்கமும் அடையவேண்டும் என்ற ஆழ்ந்த விருப்பமுமே அல்லவா? முருகனின் பக்கலிலுள்ள வள்ளியும் தெய்வானையும் குறிப்பது சிற்றாடை கட்டிய பாவையரையல்ல என்பார்கள். ஞானசக்தியாகிய முருகனை(Goal) அடைய இச்சாசக்தியாகிய (Passion) ஆழ்ந்தவிருப்பமும் கிரியாசக்தியாகிய(Action) செயலும் உடனிருக்கவேண்டுமென்பார்கள். “வெற்றிக்கு அடிப்படை அதைப்பற்றிய சிந்தனை; அதற்கேற்ற…