வள்ளுவர் குலவினம் – பேராசிரியர் ஞா.தேவநேயப்பாவாணர்
இவ்வுலகத்தினர் எல்லாரும் இருமைப் பயனும் எய்தி இன்புறுமாறு. எக்காலத்திற்கும் எந்நாட்டிற்கும் ஏற்றவாறு. வாழ்க்கைக்கு வழி வகுத்து அதில் நடந்தும் காட்டிய வள்ளுவர் தமிழ்ப் புலவருள் தலையாயார் என்பது எல்லார்க்கும் ஒப்ப முடிந்த முடிவாம். இத்தகைய தலைமை சான்ற வள்ளுவரை, வேண்டுமென்றே ஆரிய வழியினராகக் காட்ட வேண்டி, பிராமணத் தந்தைக்குப் பிறந்தவராகக் கூறுவது ஒருசார் புறத் தமிழர் மரபு. இனி, இதற்கு எதிராக அவரை உயர்த்திக் காட்டுதற் பொருட்டு உண்மைக்கு மாறாய் உயர்வாகக் கருதப் பெறுகின்ற ஒரு குலத்தினராகக் கூறுவது, ஒருசார் அகத்தமிழர் மரபு….