தன்னம்பிக்கையுடன் தொழில் செய்யும் மாற்றுத்திறனாளி திண்டுக்கல் மாவட்டம், கே.சிங்காரக்கோட்டையைச்சேர்ந்தவர் சேகரன். இவர் ஒரு மாற்றுத்திறனாளி. இரண்டு கால்களும் செயல் இழந்துள்ள. இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இக்குழந்தைகளைக் கெங்குவார்பட்டியில் உள்ள  ஏதிலியர் இல்லத்தில் படிக்க வைத்துள்ளார். இவர் கால்நடைகளான குதிரை,  மாடுகளுக்குக் குளம்பாணி(இலாடம்) அடிக்கும் தொழில் செய்து வருகின்றார்.  இத்தொழிலின் பொருட்டு இவர் திண்டுக்கல், தேனி மாவட்டங்களுக்குச் சென்று தன்னுடைய குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார்.   கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னர் இயந்திரங்களின் பயன்பாடு அரிதாக இருந்தது. அப்பொழுது  வேளாண்மைக்குக் கால்நடைகள் பயன்படுத்தப்பட்டன. நிலத்தை உழுதல்,…