தேனி மாவட்டத்தில் சூறாவளிக்காற்றால் சேதமடைந்த நெற்பயிர்கள்

தேனி மாவட்டத்தில்   சூறாவளிக்காற்றால் சேதமடைந்த நெற்பயிர்கள்   தேனி மாவட்டம், பெரியகுளம் ஒன்றியத்திற்குற்பட்ட குள்ளப்புரம் பகுதியில் சூறாவளிக்காற்றால் நெற்பயிர்கள் சேதம் அடைந்ததால் உழவர்கள் வேதனை அடைந்துள்ளனர்.   தேவதானப்பட்டி அருகே உள்ள குள்ளப்புரம் பகுதியில் ஏறத்தாழ நூற்றுக்கணக்கான காணி(ஏக்கர்) பரப்பளவில் நெல் பயிரிடல் நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு நாள்களாக மழையும், பலத்த சூறாவளிக்காற்றும் வீசுவதால் அறுவடைக்கு   ஆயத்தமாக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்து பூமியில் விழுந்து உள்ளன. இதனால் பல நூறாயிரம் மதிப்புள்ள நெற்பயிர் வீணாயின. தேவதானப்பட்டிப் பகுதியில் இயற்கைச் சீற்றத்தால் வாழை, கரும்பு,…

பொதுப்பணித்துறைக் குளங்கள் ஆக்கிரமிப்பு

தேவதானப்பட்டிப் பகுதியில் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான குளங்கள் ஆக்கிரமிப்பு   தேவதானப்பட்டிப் பகுதியில் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமாக உள்ள குளம், ஏரி, கண்மாய், வாய்க்கால் அனைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால் மழைக் காலத்தில் வருகின்ற நீரைத் தேக்கவிடாமல் தடுத்து வெளியேற்றுகின்றனர். இதனால் கோடைக் காலத்திற்கு முன்பே குளங்கள், ஏரிகள், கண்மாய்கள் ஆகியவை நீரின்றி வறண்டு காணப்படுகின்றன.  தேவதானப்பட்டி அருகே உள்ள மலைச்சாலையில் மத்துவார்குளம் என்ற கண்மாய் உள்ளது. இக்கண்மாயில் கடைகள், பைஞ்சுதை(cement) தொட்டிகள் கட்டும் தொழிற்சாலைகள் முறைகேடாகக் கட்டப்பட்டுள்ளன. இதனால் இந்த ஆண்டு பெய்த மழையால் பெருகிய தண்ணீர்…

மதுபானச்சாலையாக மாறிவரும் குள்ளப்புரம் சாலை

மதுபானச்சாலையாக மாறிவரும் குள்ளப்புரம் சாலை   தேவதானப்பட்டி அருகே உள்ள குள்ளப்புரம், பொம்மிநாயக்கன்பட்டி சாலைகள் மதுபானச்சாலையாக மாறிவருகின்றன. குள்ளப்புரம், பொம்மிநாயக்கன்பட்டி, அ.வாடிப்பட்டி போன்ற ஊராட்சிகளில் மதுபானக்கடைகள் இல்லை. எனவே இப்பகுதியில் உள்ள மக்கள் செயமங்கலத்தில் உள்ள மதுபானக்கடைகளில் மதுபானங்களை வாங்கி மது அருந்துகின்றனர். செயமங்கலத்தில் உள்ள மதுபானக்கடையில் குடிப்பக வசதி இல்லை. இதனால் மதுப்பிரியர்கள் மதுபானங்களை வாங்கிக் குள்ளப்புரம், பொம்மிநாயக்கன்பட்டி சாலைகளில் இருபுறமும் கூட்டம், கூட்டமாக உட்கார்ந்து மதுபானங்களை அருந்துகின்றனர். இப்பகுதியில் போதிய பேருந்து வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் நடந்து செல்லும்போது அவர்களைத்…