உ.வே.சா.வின் என் சரித்திரம் 16
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 15 தொடர்ச்சி) உ.வே.சா.வின் என் சரித்திரம் அத்தியாயம் 9 : குழந்தைப் பருவம்: தொடர்ச்சி பாரதியாருடைய பழக்கம் ஏற்பட்ட பின்பு நந்தன் சரித்திரக் கீர்த்தனங்களிற் சிலவற்றையும் என் தந்தையார் தம் இராமாயணப் பிரசங்கத்தினிடையே பாடிக் காட்டலானார். அக்கீர்த்தனங்களின் எளிய நடையும் அவற்றில் அமைந்திருந்த பக்திச் சுவையும் கேட்போர் உள்ளங்களைக் கவர்ந்தன. என் குழந்தைப் பிராயத்தில் எனக்கிருந்த பழக்கம் ஒன்றை என் தாயார் சொல்லியிருக்கிறார்; நான் காலையில் எழும்பொழுதே எனக்கு ஏதேனும் ஆகாரம் கொடுக்க வேண்டுமாம். ரொட்டி, பி சுகோத்து முதலிய உணவுப் பொருள்கள் அந்தக் காலத்தில்…
உ.வே.சா.வின் என் சரித்திரம் 15
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 14 தொடர்ச்சி) உ.வே.சா.வின் என் சரித்திரம் அத்தியாயம் 9குழந்தைப் பருவம் அரியிலூரில் என் தந்தையார் ஒருவாறு திருப்தியோடு காலங்கழித்து வந்தாராயினும், அவருடைய உள்ளத்துள்ளே ஒரு வருத்தம் இருந்தே வந்தது. தம் குடும்பக் கடனாகிய 500 உரூபாயைத் திருப்பிக் கொடுக்க முடியவில்லையே என்ற எண்ணமே அதற்குக் காரணம். அதனால் அவருக்கு இடையிடையே ஊக்கக்குறைவு ஏற்பட்டது. ‘எவ்வாறேனும் 500 உரூபாய் சம்பாதித்துக் குடும்பக் கடனைத் தீர்த்து நிலங்களை மீட்க வேண்டும்’ என்ற கவலை அவருக்கு வரவர அதிகரித்து வந்தது. இல்லறத் தருமத்தை மேற்கொண்ட…