தமிழ் இணையக்கல்விக்கழகம் : நோக்கும் போக்கும் 7 – இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ் இணையக்கல்விக்கழகம் : நோக்கும் போக்கும் 6 தொடர்ச்சி) 7 ஙி.) மொழிக்கொலைக்குத் துணை நிற்கக்கூடாது : தமிழ் இணையக்கல்விக்கழகம் அரசு சார் நிறுவனம். எனவே, அரசின் கொள்கைக்குமாறான செயல்களில் ஈடுபடவோ அரசின் கொள்கைக்கு மாறான கருத்துகளைப் பரப்பவோ இடம் தரக்கூடாது. தமிழக அரசு, சீர்திருத்தம் என்ற பெயரிலான எழுத்துச்சிதைவிற்கு எதிரானது. ஆனால், இதன் தளத்தில் முந்தைய தலைவர் வரிவடிவச்சிதைவில் ஈடுபாடுள்ளவர் என்பதால் அதற்குரிய விளக்கத்தைக் காணொளி வாயிலாகப் பரப்பிவந்தனர். அதனை அகற்றுமாறு வேண்டியும் அகற்றவில்லை. அதற்கு மாறான உண்மைக் கருத்தை…
தமிழ் இணையக்கல்விக்கழகம் : நோக்கும் போக்கும் 5 – இலக்குவனார் திருவள்ளுவன்
(அகரமுதல 95, ஆவணி 20, 2046 / செப்.06, 2015 தொடர்ச்சி) மீள்பார்வைக் குழு : த.இ.க.கழகத்தின் தளத்தில் நூற்பதிவு முடிந்த பின்னர் அல்லது இது போன்று ஏதும் பதிவாக்கம் முடிந்த பின்னர் அவை சரியான முறையில் உள்ளனவா எனப் பார்ப்பதில்லை. ஒருவரிடம் அல்லது அமைப்பிடம் பொறுப்பை ஒப்படைத்த பின்னர், அவர்கள் பணி முடிவிற்குப் பணம் கொடுத்ததும் அப்பணி நிறைவுற்றது என்ற போக்கே இக்கழகத்தில் உள்ளது. எனவே, தவறுகள் கண்டறியப்படாமல் உள்ளன. எனவே, மீள்பார்வைக் குழுவை அமைத்து, ஒவ்வொரு பணி முடிந்த பின்னர் உரிய…
தமிழ் இணையக்கல்விக்கழகம் : நோக்கும் போக்கும் 6 – இலக்குவனார் திருவள்ளுவன்
6 3.பணித்தரவுக் குழு: த.இ.க.கழகத்தின் பணிகள் சரியான முறையில் மக்களுக்குத் தரப்படுவதில்லை. வெளிப்படுத்தும்பாங்கில் உள்ள தவறு சில இடங்களில் காரணமாக அமைகின்றது. தொடக்கப் பணிகளைத் தளத்தில் கொடுத்துவிட்டு அப்பணிகள் வளர்கையில் அல்லது பெருகுகையில் அவற்றைச் சேர்க்காமை பல இடங்களில் காரணமாக அமைகின்றது. சான்றாக இதன் தளத்தில் முனைவர்பட்ட ஆய்விற்குரிய தரவு நூல்கள் உள்ளன என்பதுபோல் குறிப்பும் தொடர்பில்லாமல் வழிகாட்டியும் தமிழ்ப்பல்கலைக்கழக முனைவர் பட்டமும் தரப்படும் என்பன போன்ற குறிப்புகளும்தான் உள்ளன. மாறாக முனைவர் பட்டம் ஆய்விற்குப் பதிவும் வழிகாட்டியும் தரவு நூல்களும் வழங்கப்பெற்று,…
தமிழ் இணையக்கல்விக்கழகம் : நோக்கும் போக்கும் 4 – இலக்குவனார் திருவள்ளுவன்
(அகரமுதல 94, ஆவணி 13, 2046 / ஆக.30, 2015 தொடர்ச்சி) 4 த.இ.க.க.வளர்ச்சிக்காக அமைக்கப்பட வேண்டிய குழுக்கள்: என்னென்ன குழுக்கள் தேவை எனப் பார்ப்போம். செம்மையாக்கக் குழு: த.இ.க.கழகத்தின் பாடங்களில் தவறுகள் இடம் பெற்றுள்ளன. தொல்காப்பியர் காலம் பின்னுக்குத் தள்ளப்பட்டு உரைக்கப்பட்டுள்ளது. கல்வெட்டு அடிப்படையில் எழுத்து வளர்ச்சி எனக் கூறுவது தவறான விளக்கம். கல்வெட்டில் உள்ளதுபோன்ற எவ்வரிவடிவ மாற்றமும் ஓலைச்சுவடிகளில் இடம் பெற்றதில்லை. “தொல்லை வடிவின எல்லா எழுத்தும்” என இலக்கண நூல்களே வரிவடிவ மாற்றமின்மையைக் குறிக்கின்றன. எனவே, இது போன்ற…