பொன்விழாவில் வந்தவாசிக் கிளை நூலகத்திற்கு நூல்கள் வழங்கும் விழா
50-ஆவது சிறப்பு பொன்விழா ‘சந்திப்பு’ நிகழ்வில் அரசுக் கிளை நூலகத்திற்கு நூல்கள் வழங்கும் விழா: சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்துகுமார் வழங்கினார் வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டம் சார்பில் நடைபெற்ற 50-ஆவது சிறப்புப் பொன்விழா ‘சந்திப்பு’ நிகழ்வில், கிளை நூலகத்திற்கு வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்துகுமார் நூல்களை வழங்கிச் சிறப்பித்தார். இவ்விழாவிற்கு நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேசு தலைமையேற்றார். விழாவில் பங்கேற்ற அனவரையும் கிளை நூலகர் கு.இரா.பழனி வரவேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்ட தெள்ளாறு ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் கே.ஆர்.சீதாபதி, நூலகத்தில்…