கவிஞர் மு.முருகேசு எழுதிய நூலுக்குக் குழந்தை இலக்கியப் பரிசு
கவிஞர் மு.முருகேசு எழுதிய நூலுக்குக் குழந்தை இலக்கியப் பரிசு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் ‘கு.சின்னப்பபாரதி குழந்தை இலக்கியப் பரிசு’ வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு ஊரைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேசு எழுதிய குழந்தைகளுக்கான சிறுகதை நூலுக்குக் கிடைத்துள்ளது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் ஆண்டுதோறும் தமிழில் வெளியாகும் சிறந்த படைப்பிலக்கிய நூல்களுக்குப் பரிசுகளை வழங்கி கெளரவித்து வருகிறது. 2015- ஆம் ஆண்டு வெளியான சிறந்த நூல்களுக்கான பரிசளிப்பு விழா இன்று (ஆவணி 09, 2047 / செட்டம்பர் 25) தேனியில் நடைபெற்றது;…