தொடக்கப்பள்ளி மாணாக்கர்களுக்கான பேச்சுப்போட்டி, துபாய்
துபாயில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான + அனைத்துலகப் பேச்சுப் போட்டி 2016 தொடக்கப் பள்ளி மாணவர்களின் நாவன்மைக்கு நல்லதொரு களமாக மலர்ந்து வரும் ‘மாணவர் முழக்கம்’ எனும் அனைத்துலகத் தமிழ்ப் பேச்சுப் போட்டியின் மாபெரும் இறுதிச்சுற்று இம்முறை எழில்மிகு துபாயில் இடம் பெறுகிறது. மலேசியாவின் ஆத்திரோ தொலைக்காட்சியும் ‘வணக்கம் மலேசியா’ இணையச் செய்தித் தளமும் இணைந்து, தமிழகம் வேலம்மாள் உலகப்பள்ளி நிறுவனத்தாரின் ஆதரவுடன் நடத்துகின்றன. எதிர்வரும் கார்த்திகை18, 2047 / திசம்பர் 3ஆம் தேதி சனிக்கிழமை துபாயின் அல் சபாவில் சே.எசு.எசு. (JSS Private…