நோபல் பரிசுத் தகுதியாளர் சி.இலக்குவனார்
தமிழைக் காத்தவரை நாம் மறக்கலாமா? நோபல் பரிசுத் தகுதியாளர் புரட்சித்தமிழறிஞர் பேராசிரியர் சி.இலக்குவனார் விருந்தோம்பல், நன்றிமறவாமை முதலிய பண்புகள் தமிழ்மக்கள் கடைப்பிடித்து வருவனவாக இருப்பினும் மறதியும் நம்மைக் காத்தாரைப் போற்றாமையும் இன்றைய தமிழ் மக்களின் அரும் பண்புகளாகத் திகழ்ந்து நம்மைத் தலைகுனியச் செய்கின்றன. எனவேதான் தனக்கென வாழாமல் தமிழ்க்கென வாழ்ந்து மறைந்த தவப்புதல்வர் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனாரைத் தமிழுலகும் மறந்து விட்டது; நம் சமுதாய மக்களும் மறந்து விட்டனர். சங்கத்தமிழை மீட்டுப் பரப்பிய அவர் புலமையும் தொண்டும் குறள் நெறியைப் பரப்பிய அவரின்…