(அதிகாரம் 027. தவம் தொடர்ச்சி) 01.அறத்துப் பால் 03.துறவற இயல்      அதிகாரம் 028. கூடா ஒழுக்கம்   அழுக்கான, கடைப்பிடிக்கக் கூடாத ஒழுக்கக் கேட்டோடு கூடாமை.   வஞ்ச மனத்தான் படிற்(று)ஒழுக்கம், பூதங்கள்      ஐந்தும், அகத்தே நகும்.     வஞ்சகன்தன் பொய்ஒழுக்கம் கண்டு,        மெய்வாய்கண் மூக்குசெவி நகும்.   வான்உயர் தோற்றம் எவன்செய்யும்? தன்நெஞ்சம்,    தான்அறி குற்றப் படின்.     மனம்அறிந்த குற்றத்தார்க்[கு] உயர்தவக்        கோலத்தால் என்ன பயன்?   வலியில் நிலைமையான் வல்உருவம்,…