முதலமைச்சர் மாநாடும் இந்தி மொழியும் – கூட்டரசன்
மாநில முதலமைச்சர்கள் மாநாடு முடிந்துவிட்டது. இந்தியையும் ஆங்கிலத்தையும் இந்தியக் கூட்டரசின் அலுவலர் தேர்வு மொழிகளாக ஆக்குவதெனவும், இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டோரும் ஏனையோரும் ஒத்த நிலையில் மதிப்பெண்கள் பெறுவதற்கு வழியொன்று வகுக்கப்படும் எனவும் அம்மாநாட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக முதலமைச்சர் கூறுகின்றார். இதற்குத்தாமே பொறுப்பாளி என்றும் நம் முதலமைச்சர் அறிவிக்கின்றார். இந்தியைத்தாய் மொழியாகக் கொண்டோர் இந்தியில் எழுதுவதில் எளிமையும் ஆற்றலும் கொள்வர். ஆங்கிலத்தில் எவ்வளவுதான் புலமை பெற்றிருப்பினும் ஆங்கிலம் அயல் மொழிதானே, அயல்மொழியைப் பயன்படுத்துவதில் அவ்வளவு எளிமையும் ஆற்றலும் கொள்ள இயலாது. இருவகை விடைத்தாட்களையும் திருத்துவோர்…