உண்மைக் கூட்டரசு நிலைக்க வேண்டுமானால்…
ஒட்டடார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே கொட்டான் எனப்படுதல் நன்று. இந்தியக் கூட்டரசு பதினான்கு மொழிகளையும் தேசிய மொழிகளாக ஏற்றுக் கொண்டிருப்பதாக அரசியல் சட்டம் கூறுகின்றது. எல்லா மாநிலங்களும் இணைந்துள்ள கூட்டரசில் எல்லா மாநில மொழிகட்கும் சம உரிமையும் வாய்ப்பும் அளித்தல் வேண்டும். கூட்டரசுப் பாராளுமன்றில் அவைகளைப் பயன்படுத்துவதற்குத் தடை இருத்தலாகாது. கூட்டரசுப் பாராளுமன்றில் தேசிய மொழிகள் என ஒப்புக் கொள்ளப்பட்டவற்றுள், எதில் வேண்டுமானாலும் யாரும் உரை நிகழ்த்தலாம் எனும் உரிமை ஒப்புக் கொள்ளப்படல் வேண்டும். இவ்வுரிமை மறுக்கப்பட்டால் கூட்டரசு என்பது பொருளற்று…