கொலைகார இலங்கையுடன் கூட்டுப்பயிற்சி – செயலலிதா கண்டனம்
திரிகோணமலையில் கொலைகாரச் சிங்களத்தின் கடற்படைக் கூட்டுப்பயிற்சி நடைபெறுகிறது. இப்பயிற்சியில் இந்தியக்கடற்படை பங்கேற்கிறது. இதற்கு முதலமைச்சர் செயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இலங்கையுடன் இந்தியக் கடற்படைக் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டிருப்பது தமிழக மக்களின் உணர்வுகளை ஊறுபடுத்தும் வகையில் உள்ளது. இலங்கையுடனான கடல்சார் ஒத்துழைப்பு தமிழக மீனவர்களின் வாழ்வாதாரங்களை ஊறுபடுத்தவே உதவும். எனவே, உடனடியாக இலங்கைக்குக் கூட்டு பயிற்சியில் ஈடுபடச் சென்றுள்ள 2 இந்திய கப்பற்படைக் கப்பல்களை உடனடியாகத் திரும்ப அழைக்க வேண்டும் என்றும் இலங்கையுடன் எந்தக் கூட்டுப் பயிற்சியும் மேற்கொள்ளக் கூடாது என்று பாதுகாப்பு…