ஒன்றாய் இருத்தலைப் பார்க்கிறோம் – அழ.வள்ளியப்பா
ஒன்று சேர்தல் கூட்டம் கூட்ட மாகவே குருவி பறந்து சென்றிடும். குவியல் குவிய லாகவே கொட்டிக் கற்கள் கிடந்திடும். கூறு கூறாய்ச் சந்தையில் கொய்யாப் பழங்கள் விற்றிடும். குலைகு லையாய்த் திராட்சைகள் கொடியில் அழகாய்த் தொங்கிடும். வரிசை வரிசை யாகவே வாழைத் தோப்பில் நின்றிடும். மந்தை மந்தை யாகவே மாடு கூடி மேய்ந்திடும். சாரை சாரை யாகவே தரையில் எறும்பு ஊர்ந்திடும். நேரில் தினமும் பார்க்கிறோம் நீயும் நானும் தம்பியே! – குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா