வரிவிலக்கு தர வேண்டும் எனக் கேட்பதற்கு உதயநிதி வெட்கப்படவில்லையா?
வரிவிலக்கு தர வேண்டும் எனக் கேட்பதற்கு உதயநிதி வெட்கப்படவில்லையா? உதயநிதிதாலின் தான் உருவாக்கி(நடித்துள்ள) ‘கெத்து’ என்னும் திரைப்படத்திற்குத் தமிழ்ப்பெயருக்கான வரிவிலக்கு தரவில்லை என உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார். இது குறித்து இரு செய்திகளைக் குறிப்பிட வேண்டும். முதலாவது தமிழ்ப்பெயர் பற்றியது. ‘கெத்து’ என்பது தமிழ்ப்பெயர் அல்ல என உரிய குழு பரிந்துரைக்காமையால் வரிவிலக்கு மறுத்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. ‘கெத்து’ என்பது கன்னடம், துளு, படகு முதலான தமிழ்ச்சேய்மொழிகளில் இருந்தாலும் தமிழ்ச்சொல்தான். தமிழ்ச்சொல் அதன் சேய் மொழிகளில் உள்ளதாலேயே அதனை நாம்…