தமிழரும் தமிழர் என்ற தம்பெயர் இழந்திடாரோ! – பாவேந்தர் பாரதிதாசன்
பெயர் மாற்றம் சென்னையில் கீழ்ப்பாக்கத்தைத் தேடினேன். ஓர் இளைஞன் அன்னதோர் ஊரே இல்லை என்றனன்! அப்பக்கத்தில் இன்னொரு முதியோர் தம்மை வினவினேன்; இருப்ப தாகச் சொன்னார் அவ்வூர்க்குப் போகத் தோதென்றும் சொல்ல லானார். மக்களின் இயங்கி வண்டி இங்குத்தான் வந்து நிற்கும் இக்காலம் வருங்காலந்தான் ஏறிச்செல் வீர்கள் என்றார். மக்களின் இயங்கி வண்டி வந்தது குந்திக் கொண்டேன் சிக்கென ஓர் ஆள் “எங்கே செல்லுதல் வேண்டும்” என்றான். “கீழ்ப்பாக்கம்” என்று சொன்னேன் கேலியை என்மேல் வீசிக் ”கீழ்ப்பாக்கம் என்ப தில்லை மேல்பாக்கம் தானும் இல்லை…