தமிழ் உரிமைப் ‘பேராசிரியர்’ இலக்குவனார் – முனைவர் மறைமலை
தமிழ் உரிமைப் ‘பேராசிரியர்’ இலக்குவனார் எண்ணற்ற பேராசிரியர்கள் தமிழுக்குத்தொண்டாற்றியுள்ளனர். தமது ஆய்வு நூல்களின் வழியாகவும் உரைகளின் மூலமும்சொற்பொழிவுகளின் வாயிலாகவும் தமிழ் இலக்கிய இலக்கணங்களின் பெருமையை எடுத்தியம்பியுள்ளனர். ஆனால் தமிழுக்குத் தீங்கென்று உரைக்கக் கேட்டமாத்திரத்திலே நரம்பெல்லாம் இரும்பாக்கி நனவெல்லாம் உணர்வாக்கிக் கிளர்ந்தெழுந்து உரிமைப் போர்க்களம் புகுந்த போராளியாகத் திகழ்ந்த ஒரே பேராசிரியர் இலக்குவனார் மட்டுமேயாவர். தமிழ் வளர்த்த பேராசிரியராக மட்டுமின்றித் தமிழ் உரிமைப் போராசிரியராகவும் அவர் திகழ்ந்தமையாலேயே என்னைப் போன்ற அவருடைய மாணவர்கள் நெஞ்சிலே அவர் நிறைந்துள்ளார். அவருடைய புதல்வர்களில் ஒருவன் என்னும்…
இலக்குவனாரின் தொல்காப்பிய ஆராய்ச்சி – முனைவர் க.இராமசாமி
இலக்குவனாரின் தொல்காப்பிய ஆராய்ச்சி தமிழினத் தொன்மையையும் தனித்தன்மை யையும்நிறுவும் வகையில் நமக்குக் கிட்டியுள்ள சான்றுகள் மிகச் சிலவே. அவற்றுள்தலையாயது ஒல்காப் புகழ்த் தொல்காப்பியம். மொழி, இலக்கியம், வாழ்வியல்மூன்றனுக்கும் இலக்கணம் கூறும் பண்பாட்டுப் பெட்டகம். இதுபோன்றதோர் இலக்கணநூல் உலகில் எந்த மொழியிலும் தோன்றியது இல்லை. தமிழிலும் கூட இதற்குநிகரானதோர் இலக்கண நூல் இதுவரை உருவாகவில்லை. தொல்காப்பியத்திற்குமுன்னர்ப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் இலக்கண இலக்கிய வளம் மிக்கதாய் தமிழ்இருந்துவந்திருக்கவேண்டும் என்பதற்கு இதுவே நற்சான்றாய்த் திகழ்கிறது. தமிழால் வாழ்ந்தோர் பலர். தமிழுக்காகவாழ்ந்தோர் மிகச்சிலர். அம் மிகச்…
இலக்குவனார்க்கு வழங்கப்பெற்ற பட்டங்களும் அடைமொழிகளும்
இலக்குவனார்க்கு வழங்கப்பெற்ற பட்டங்களும் அடைமொழிகளும் தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார்க்கு நகர்தோறும் தமிழ் அமைப்புகள் பட்டங்கள் வழங்கியுள்ளன. சிறப்பு அடைமொழி குறித்தும் இலக்குவனாரை அழைத்துள்ளனர். நூற்றுக்கணக்கில் உள்ள இவற்றுள் சிலவற்றைக் காண்போம்! இவையே பேராசிரியரின் அரும் பணிகளையும் ஆழ்ந்த புலமையையும் தமிழ் காக்கும் போர்க் குணத்தையும் மக்களால் போற்றப்பட்ட சிறப்பையும் நமக்கு உணர்த்தும். அளப்பரிய தொண்டாற்றிய பெருமகனார் ஆற்றல் களஞ்சியம் இதழியல் செம்மல் இந்தி எதிர்ப்புப் படைத்தளபதி இந்தி எதிர்ப்புப் போருக்கு மூலவர் இருபதாம் நூற்றாண்டு இளங்கோ அடிகள் இருபதாம் நூற்றாண்டு நக்கீரர் இருபதாம்…