நல்லிணக்கத்தைத் திணிக்க முடியுமா? – புகழேந்தி தங்கராசு
இனப்படுகொலையாளிகளின் கேடயம் நல்லிணக்கம் பாதிக்கப்பட்டவர்களின் ஆயுதம் பன்னாட்டு விசாரணை வடமாகாண அவை முதல்வர் விக்னேசுவரன், வள்ளுவத்தை நேசிப்பவர். அவரது அறிக்கைகளில் பொருத்தமான திருக்குறள் இடம்பெறுவதைத் தொடர்ந்து கவனிக்கிறேன். ஈரடி தான் என்றாலும், சுற்றிவளைக்காமல் நேரடியாகக் செய்திக்கு வருவது குறளின் தனிச்சிறப்பு. அதை நேசிக்கிற விக்னேசுவரனுக்கும் இந்தத் திறன் கைவரப் பெற்றிருக்கிறது. சொற்சிக்கனத்தை, வள்ளுவத்தின் வாயிலாகவே கற்றிருக்க வேண்டும் விக்னேசுவரன். சுருக்கமான சொற்களால் நறுக்குத் தெறித்தாற்போல் பளிச்செனப் பேசிவிடுகிற அவரது சொல்லாற்றல், ‘சொல்லுக சொல்லைப் பிறிதோர் சொல் அச்சொல்லை வெல்லும் சொல் இன்மையறிந்து’ என்கிற…