வரிவிலக்கு தர வேண்டும் எனக் கேட்பதற்கு உதயநிதி வெட்கப்படவில்லையா?
வரிவிலக்கு தர வேண்டும் எனக் கேட்பதற்கு உதயநிதி வெட்கப்படவில்லையா? உதயநிதிதாலின் தான் உருவாக்கி(நடித்துள்ள) ‘கெத்து’ என்னும் திரைப்படத்திற்குத் தமிழ்ப்பெயருக்கான வரிவிலக்கு தரவில்லை என உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார். இது குறித்து இரு செய்திகளைக் குறிப்பிட வேண்டும். முதலாவது தமிழ்ப்பெயர் பற்றியது. ‘கெத்து’ என்பது தமிழ்ப்பெயர் அல்ல என உரிய குழு பரிந்துரைக்காமையால் வரிவிலக்கு மறுத்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. ‘கெத்து’ என்பது கன்னடம், துளு, படகு முதலான தமிழ்ச்சேய்மொழிகளில் இருந்தாலும் தமிழ்ச்சொல்தான். தமிழ்ச்சொல் அதன் சேய் மொழிகளில் உள்ளதாலேயே அதனை நாம்…
‘பாபநாசம்’ படத்திற்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும்.
தமிழ்ப்பெயர்த் திரைப்படங்களுக்குக் கேளிக்கை வரிவிலக்கிற்கான தேர்வுக்குழுவை மாற்றி யமைக்க வேண்டும். கேளிக்கை வரிச்சட்டம் என்பது 1939 முதல் தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ளது. இதன் தொடர்ச்சியாக 2006 இல் [அரசாணை (நிலை) எண் 72 (வணிக வரி -பதிவுத்துறை) நாள் 22.07.2006] தமிழிலேயே பெயர் சூட்டப்படும் புதிய திரைப்படங்களுக்குக் கேளிக்கை வரியிலிருந்து முழுமையான வரிவிலக்கு அளிக்கப்பட்டது. 20.11.2006 இல் பிறப்பிக்கப்பட்ட மற்றோர் ஆணை மூலம்[அரசாணை (நிலை) எண் 147 வணிக வரி – பதிவுத்துறை நாள் 20.11..2006] இக்கேளிக்கை வரிவிலக்கு, பழைய திரைப்படங்களுக்கும்…