பிராமணனை உயர்த்திச் சொல்லவில்லை சனாதனத் தருமம் என்கிறார்களே! – இலக்குவனார் திருவள்ளுவன்
(பூணூல் அணிந்திருக்கும் போது, ஒழுக்கக் கேடான செயல்கள் செய்யமாட்டார்கள் என்பது சரியா? – தொடர்ச்சி) சனாதனம் பொய்யும் மெய்யும்: 22-23 சூத்திரன் சுவர்க்கத்திற்காவது, சீவனத்திற்காகவாவது அல்லது இரண்டிற்குமாவது, பிராமணனையே தொழ வேண்டும். இவன் பிராமணனை யடுத்த சூத்திரனென்று ஒருவனுக்குப் பெயர் வந்தால் அதே அவனுக்குப் பாக்கியம்(மனு 10. 122). பிராமணன் கூடவே இருந்து அவனுக்குப்பணி விடை செய்ய வேண்டும் என்றும் பிராமணனைப் பிற வருணத்தார் தொழ வேண்டும் என்றும் கூறுவது பிராமணனை உயர்த்திச் சொல்வதாகாதா? இதனை எப்படி ஏற்க முடியும். “ஓர் ஊரில் எல்லாருக்கும்…
பிறரை உயர்த்தும் நன்மணி சுவேதா – விவேகானந்தன் ஆர்.
தான் வந்த வழியை நினைத்துப் பிறரை உயர்த்தும் நன்மணி சுவேதா முகநூலில் பகிரப்பட்ட நரிக்குறவர் சமூத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் வாழ்க்கையை கோரா நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்வடைகிறேன். மூல எழுத்தர் திரு. அ.சேக்காதர் இப்ராகீம் அவர்களுக்கு நன்றி. பதிவு பெரிது, அதைவிடப் பயணமும் பெரிது, தான் பிறந்த சமூகத்திற்கு முன்மாதிரியான நிகழ்வு. நெஞ்சார்ந்த வாழ்த்துகள். இனத்தோடு ஊர்விட்டு ஊர் நகர்ந்து கொண்டே இருப்பவர்கள்தான் நரிக்குறவர்கள். இவர்களில் சுவேதா, தமிழ்நாட்டின் நரிக்குறவர் இனத்தின் முதல் பொறியியல் பட்டதாரி என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார். ஆனால், இது…