வ.உ.சி.பிறந்தநாள், இலக்குவனார் நினைவு நாள், மாநிலக் கல்லூரி
சென்னை மாநிலக்கல்லூரித் தமிழ்த்துறையினர் மூன்றாம் வாரக் கருத்தரங்கமாகத் தமிழறிஞர் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. அவர்கள் பிறந்த நாளையும் தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவு நாளையும் இணைத்து அன்று தம் கல்லூரியில் நடத்தினர்.பேராசிரியர் முனைவர் ப.தாமரைக்கண்ணன் தலைமையுரை யாற்றினார்.மாணவர் செல்வி ம.காவேரி வரவேற்புரையாற்றினார். மாணவர் செல்வி வ.சுதாமணி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.துறைத்தலைவர் பேராசிரியர் முனைவர் கி.ஆதிநாராயணன் தொடக்கவுரை யாற்றினார்.மாணவர் செல்வி கோ.கோமதி, விடுதலைப்போராளி வ.உ.சி. குறித்துச் சிறப்புரையாற்றினார்.இலக்குவனார் திருவள்ளுவன், தமிழ்ப்போராளி பேரா.முனைவர் சி.இலக்குவனார் குறித்துச் சிறப்புரை யாற்றினார். மாணவர் செல்வன் ஆரணி பாரதி நன்றி நவின்றார்….