பாரதியார் வாழ்ந்த வீட்டை நினைவகமாக அறிவிக்க தருண் விசய் முயற்சி
பாரதியார் வாழ்ந்த வாரணாசி வீட்டை விடுதலைப் போராட்ட நினைவகமாக அறிவிக்க வலியுறுத்துவேன்! – தருண் விசய் பாரதியாரின் நினைவு நாளை முன்னிட்டுக் கடந்த ஆவணி 26, / செப்.11 அன்று தில்லித்தமிழ்ச்சங்கம் சார்பில் பாரதியார் உருவச்சிலைக்குத் தமிழார்வலரான உத்தரகண்டு நா.உ. தருண்விசய் மாலை அணிவித்தார். “தமிழ் மொழிக்குத் தேசிய அளவில் முழுமையான அறிந்தேற்பு கிடைக்க வேண்டும்.” என்று அவர் அப்பொழுது தெரிவித்தார். மேலும், பாரதியார் வசித்த வாரணாசி வீடு மத்திய, மாநில அரசுகளால் கண்டுகொள்ளப் படாமல் இருப்பதை அறிய வந்ததாகத் தெரிவித்தார்….