ஆளுநர் ஆட்சியில் நக்கீரன் கோபால் கைதும் விடுதலையும் – இலக்குவனார் திருவள்ளுவன்
ஆளுநர் ஆட்சியில் நக்கீரன் கோபால் கைதும் விடுதலையும் நக்கீரன் இதழாசிரியர் நக்கீரன் கோபால், நேற்று(9.10.2018) விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்; சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்; பிற்பகல் எழும்பூர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்து, பேரா.நிருமலாதேவி தொடர்பான கட்டுரைகள் தொடர்ந்து நக்கீரன் இதழில் வருவதாகவும் இவை ஆளுநரை மிரட்டுதல், ஆளுநரைப் பணிசெய்ய விடாமல் தடுத்தல் ஆகியன தொடர்பான குற்றப்பிரிவு 124.அ இன்கீழ் வருவதாகவும் காவல் துறையினர் குற்றம் சுமத்தி வழக்கு தொடுத்திருந்தனர். ஆனால் இதை உசாவிய எழும்பூர் 3…
சென்னை விமானநிலையத்தில் நக்கீரன் கோபால் கைது!
சென்னை விமானநிலையத்தில் நக்கீரன் கோபால் கைது! சென்னை விமான நிலையத்தில் நக்கீரன் புலனாய்வு இதழாசிரியரும், மூத்த இதழளருமான நக்கீரன் கோபால் எந்த ஆவணங்களும் இன்றிக் காவல் துறையினரால் தளையிடப்பட்டுள்ளார். தமிழக ஆளுநர் மாளிகையிலிருந்து வந்த முறையீட்டின் அடிப்படையில் சென்னை விமானநிலையத்திலிருந்து புனே செல்லவிருந்த ஆசிரியர் நக்கீரன் கோபால் அடையாறு சரகக் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார் என நக்கீரன் இதழ் கூறுகிறது. நக்கீரன் இதழில் பேராசிரியை நிர்மலாதேவி தொடர்பான கட்டுரை வெளியானதை அடுத்து ஆளுநர் மாளிகையிலிருந்து முறையீடு அளித்துள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன. முதலில் அடையாறு…
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙொ) – இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙை) – தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙொ) ‘பேராசிரியர் இலக்குவனாரே மொழிப்போர்த் தந்தை’ என்பதை எடுத்தியம்பி ஆய்வுசெய்துள்ள திருவாட்டி து.சுசீலா பின் வருமாறு தம் ஆய்வேட்டில் குறிப்பிட்டுள்ளார்: தி.மு.க. கை விட்டுவிட்ட பிறகும் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களை மாணவர்கள் தொடர்ந்து நடத்திய செய்தி இப்போராட்டங்களைத் தலைமையேற்று நடத்தியவர்கள் மாணவர்கள் என்பதை வலியுறுத்துகிறது. அத்தகைய மாணவர்களின் பங்களிப்பிற்கு மூலக் காரணமாகவும் விலைவாசிப் போரில் ஈடுபட்டிருந்த தி.மு.க. கழகத்தினரை இந்தி எதிர்ப்புப்போரில் ஈடுபடுத்திய கோட்பாட்டாளராகவும் (Theoretician) இலக்குவனார் தமிழ்உரிமைப்…
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙை) – இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙே) – தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙை) பேராசிரியர் இலக்குவனாரின் மொழிப்போர்த் தலைமை குறித்த நல்லாவணமாகப் பேரறிஞர் அண்ணா அவர்களின் சொற்பொழிவொன்றைக் குறிப்பிடலாம். பேராசிரியர் இலக்குவனாரின் 55 ஆம் பிறந்தநாள் பெருமங்கல விழாவில் பேரறிஞர் அண்ணா ஆற்றிய உரையின் ஒரு பகுதி வருமாறு: பேராசிரியரை(இலக்குவனாரை)ச் சிறைப்படுத்தியதால், வேலையிலிருந்து நீக்கி வாழ்வில் தொல்லை விளைவித்ததனால், தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொண்டதாகத் தவறாகக் கணக்கு போடுகிறார்கள். முப்பதாண்டு காலமாகப் பேராசிரியர் இலக்குவனார் ஊட்டிய தமிழ் உணர்ச்சி நூறாயிரக்கணக்கான தமிழர்களைத் தமிழுணர்வு கொண்ட…
தினகரன் கைது! – மக்கள் தொடுக்கும் ஐய வினாக்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன்
தினகரன் கைது! – மக்கள் தொடுக்கும் ஐய வினாக்கள்! பொதுவாகக் கையூட்டு பெறுபவரைத்தான் கைது செய்வார்கள். ஆனால், இங்கே அவ்வாறு கையூட்டு பெறுபவரையோ கேட்டவரையோ கைது செய்யவில்லையே! பணம் கொடுத்து இரட்டை இலைச்சின்னத்தை வாங்க முயன்றதாகத்தானே கைது செய்துள்ளார்கள்? ஒரு வேளை கையூட்டு பெற விருப்பம் இல்லாத ஒருவர், அவரிடம் யாரும் குறுக்கு வழியில் ஒரு செயலை முடிக்கக் கையூட்டு தர முயன்றால், அவ்வாறு தர முயல்பவரைப்பற்றிப் புகார் செய்தால் பணம்கொடுக்க முயன்றவரைக் கைது செய்வார்கள். இங்கே அவ்வாறு தேர்தல் ஆணையர் யாரும்…
போராட்டத்தில் ஈடுபட்ட உழவர்கள் கைது
சென்னை மத்தியத் தொடர்வண்டி நிலையத்தருகே போராட்டத்தில் ஈடுபட்ட உழவர்கள் கைது வேளாண் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும், வறட்சியால் இழந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திக் கழுத்தில் தூக்குக் கயிற்றுடன் சென்னை மத்தியத் தொடர்வண்டி நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட உழவர்கள் கைது செய்யப்பட்டனர். கடந்த பங்குனி 18, 2047 / ௩௧-௩-௨௦௧௬ (31.3.2016) அன்று இப்போராட்டம் நடைபெற்றது. “பயிர் செய்த நிலங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டு விட்டன. ௬௦௦ ஆயிரம் (60 இலட்சம்) தென்னை மரங்கள்…
ஒன்பது மாவட்ட மீனவர்கள் கைது!
இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட்ட ஒன்பது மாவட்ட மீனவர்கள் கைது! தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் அடிக்கடி தாக்கப்படுவதைக் கண்டித்தும், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும், சிறைப்பிடித்து வைத்துள்ள விசைப்படகுகளை விடுவிக்க வேண்டும், அமைதியாக மீன் பிடிக்க உறுதி அளிக்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தியும் நாகை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், இராமநாதபுரம், காரைக்கால், சிவகங்கை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய ஒன்பது மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தை பிப்ரவரி 29, 2016…
இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 06: ம. இராமச்சந்திரன்
(அகரமுதல 103 ஐப்பசி 15, 2046 / நவ. 01.2015 தொடர்ச்சி) 6 1959ஆம் ஆண்டு மதுரை தியாகராசர் கல்லூரியில் முதுகலைப் பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் பணிபுரிய வருமாறு அழைப்புக் கிடைத்தவுடன் மதுரை சென்றார். கலைத்தந்தை தியாகராசச் செட்டியாரின் அரவணைப்பில் 1965 தொடக்கம் வரை மிகச் சிறப்பாகப் பணிபுரிந்தார். புலவர் விழா நடத்தி, மாணவர்களிடம் தமிழ் உணர்வையும் தமிழ்ப்பற்றையும் வளர்த்தார். தொல்காப்பிய ஆராய்ச்சி’16 என்னும் மிகச் சிறந்த ஆராய்ச்சி நூலையும் பழந்தமிழ்’17 என்னும் நூலையும் எழுதினார். மேலும் ‘குறள்நெறி’ என்னும் பெயரில்…
பிரணாப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்தோர் மீதான கொடுந்தாக்குதலை எதிர்த்துக் கண்டன ஆர்ப்பாட்டம்!
2009-2009இல், தமிழீழத்தில் இனப்படுகொலைப் போர் நடந்து கொண்டிருந்த போது, இந்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சராகப் பணியாற்றி, அப்போரை சிங்களத்துடன் இணைந்து வழி நடத்தியப் போர்க்குற்றவாளி பிரணாப்பு. இன்று இந்தியக் குடியரசுத் தலைவராக உள்ள அவர், திசம்பர் 20 அன்று, சென்னை இலயோலாக் கல்லூரியில் நடைபெறும் ஒரு விழாவிற்கு வந்தார். அப்பொழுது அவருக்குக் கருப்புக் கொடி காட்ட முயன்றதாகத், தமிழின உணர்வாளர்கள் மீதும், மாணாக்கர்கள் மீதும் தமிழகக் காவல்துறை கொடுந்தாக்குதலை நடத்தியது. திசம்பர் 19 ஆம் நாள், தமிழ்த் திரைப்பட இயக்குநரும், இன உணர்வாளருமான திரு….
தமிழ் பிரபாகரனை உடனே விடுதலை செய்க!
இலங்கைக்குச் சுற்றுலா புகவுச் சீட்டு பெற்று இதழாளர் மகா.தமிழ் பிரபாகரன் சென்றுள்ளார். இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிரீதரன் அலுவலகத்தில் தங்கியிருந்தார். அவர் வந்த இரண்டு நாளிலும் உடல் நலிவால் வெளியே செல்லாமல் இருந்துள்ளார். பின்னர், சிரீதரன் அவர்களுடனும் வடக்கு மாகாண அவை உறுப்பினர் பசுபதி(பிள்ளை) அவர்களுடனும் அவர்கள் மேற்கொண்ட தொகுதி நலப்பணி தொடர்பான பயணத்தில் உடன் சென்றுள்ளார். இம்மூவரும் வலைப்பாடு என்னும் ஊரில் தூய அந்தோணியார் தேவாலயத்தின் பங்குத் தந்தை அவர்களோடு உரையாடிக் கொண்டு இருந்தபோது, 25.12.2013 பகல் 1.30 மணி அளவில், இலங்கைப்…