தலைப்பெழுத்துகளைத் தமிழில் குறிப்பிடுவதை நடைமுறைப்படுத்த வேண்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்
தலைப்பெழுத்துகளைத் தமிழில் குறிப்பிடுவதை நடைமுறைப்படுத்த வேண்டும்! பெயர்களை இரு மொழிகளில் ஒரே நேரம் குறிப்பிடுவோர் உலகில் நாம் மட்டுமாகத்தான் இருக்கிறோம். பெயரின் தலைப்பெழுத்தை ஆங்கிலத்தில் குறிப்பிட்டுவிட்டு அதை அப்படியே தமிழில் குறிப்பிடும்பொழுது நமக்கு இழுக்கைத் தருகிறது என்பதை உணரத் தவறுகிறோம். பொதுவாக, தந்தை பெயர் அல்லது தாய்பெயர் அல்லது பெற்றோர் பெயர் அல்லது ஊர்ப்பெயர் முதலானவற்றின் முதல் எழுத்தையே நம் தலைப்பெழுத்தாக இடுகின்றோம். கதிரவன் மகன் நிலவன் என்னும் ஒருவர் தன் தந்தையின் முதல் எழுத்தை ஆங்கிலத்தில் குறிப்பிட்டுத் தன் பெயரைக் கே.நிலவன்…