கலைச்சொல் தெளிவோம்! 77. கொண்மூ-Cirrus
77. கொண்மூ-Cirrus கொண்மூ ஞாயிறு சுமந்த கோடு திரள் கொண்மூ (புறநானூறு : 35.17) நிரை செலல் நிவப்பின் கொண்மூ மயங்கி, (குறிஞ்சிப்பாட்டு : 50) மா மலை அணைந்த கொண்மூப் போலவும், (பட்டினப்பாலை : 95) இமிழ் பெயல்தலைஇய இனப்பலக் கொண்மூ (அகநானூறு : 68.15) பெய்துவறி தாகிய பொங்குசெலற் கொண்மூ (அகநானூறு : 125.9) உருவப் பல் கொண்மூக் குழீஇயவை போல (கலித்தொகை : 104.16) முதலிய அடிகளில் வருவதுபோல் 17 இடங்களில் கொண்மூ குறிக்கப்படுகிறது. முதலில் இச்சொல் பொதுவான பெயராக…