திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 033. கொல்லாமை
(அதிகாரம் 032. இன்னா செய்யாமை தொடர்ச்சி) 01. அறத்துப் பால் 03.துறவற இயல் அதிகாரம் 033. கொல்லாமை எவ்உயிரையும் கொல்லாது, எல்லா உயிர்களையும் காப்பாற்றும் கொள்கை அறவினை யா(து)?எனின், கொல்லாமை; கோறல், பிறவினை எல்லாம் தரும். கொல்லாமையே அறச்செயல்; கொல்லுதல், எல்லாத் தீமைகளையும் நல்கும். பகுத்(து)உண்டு, பல்உயிர் ஓம்புதல், நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. பகுத்[து]உண்டு, பல்உயிர்களைக் காத்தல், அறங்களுள் தலைமை அறம். ஒன்(று)ஆக நல்லது, கொல்லாமை; மற்(று),அதன்…